அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடை விழா

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது

Update: 2022-07-22 17:14 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இதில் முதல்நாள் மகா கணபதி ஹோமம், குடிஅழைப்பு, அபிஷேகம், தீபாராதனை, நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று சாத்தான்குளம் அழகம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக செண்டை மேளம் முழங்க கோவிலுக்கு வந்தனர். பின்னர் அபிஷேகம், அலங்கார பூஜை, மதியக்கொடை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரத்துடன் பூஜை நடந்தது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. மூன்றாம் நாளான இன்று அம்மனுக்கு பொங்கல் பூஜை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்