வெள்ளகோவிலில் கோவிலுக்கு சொந்தமான 23 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
வெள்ளகோவிலில் கோவிலுக்கு சொந்தமான 23 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் கோவிலுக்கு சொந்தமான 23 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
கோவில் நிலம்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம், பூசாரி வலசில் திருமண்கிரி குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 23.58 ஏக்கர் நிலம் பச்சாபாளையம் கிராமத்தில் உள்ளது.
பச்சாபாளையத்தில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலர் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பயன்படுத்தி கொண்டிருந்தனர். இது பற்றிய விபரம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
23 ஏக்கர் மீட்பு
அதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) கனகராஜ், காங்கயம் சரக ஆய்வர் அபிநயா, கோவில் தக்கார் திலகவதி ஆகியோர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டனர். அத்துடன், இப்பகுதி பூசாரி வலசு திருமண்கிரி குமாரசாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இதனுடைய தற்போதைய மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் இருக்கும் என கூறுகின்றனர். கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விடப்படும் ஆகையால் பொதுமக்கள் உரிய தொகையை செலுத்தி குத்தகைக்கு எடுத்து அனுபவிக்கலாம் என கோவில் தக்கார் திலகவதி கூறினார்.
----------
கோவில் நிலம் மீட்கப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.