கோவில் கும்பாபிஷேகம்

கடையம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-04-11 19:00 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் சங்கிலி பூதத்தார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி முதல்கால யாகசாலை பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சங்கிலி பூதத்தார், நூதன விநாயகர், தர்மசாஸ்தா, பிரம்மாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மதியம் அன்னதானமும், இரவு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்