பழைய வத்தலக்குண்டுவில் திருவிழா; பூப்பல்லக்கில் அம்மன் வீதிஉலா
பழைய வத்தலக்குண்டுவில் நடந்த திருவிழாவில் அம்மன் பூப்பல்லக்கில் வீதிஉலா வந்தார்.
வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், மாவிளக்கு எடுத்து வந்தனர்.
மேலும் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அம்மன் பூப்பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில், பழைய வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு, கோட்டைப்பட்டி, விராலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.