நல்ல முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

பாபநாசம் நல்ல முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.

Update: 2023-05-02 21:36 GMT

பாபநாசம்;

பாபநாசம் அருகே மாளாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நல்ல முத்து மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, எடுத்து வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இரவு வான வேடிக்கையுடன் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் கோபுராஜபுரம் மாளாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்