அமுதுபடையல் திருவிழா
குத்தாலம் அருகே உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுதுபடையல் திருவிழா நடந்தது.
குத்தாலம்;
குத்தாலம் அருகே மேலதிருமணஞ்சேரி கிராமத்தில் உத்திராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் காவடி பால்குட திருவிழா நடந்தது. விழாவையொட்டி விரதம் இருந்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வாண வேடிக்கைகள் மேளதாளங்கள் முழங்க வலம் வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று சாமி வேடம் புறப்பாடு, சீராளம் வீதி உலா காட்சி உள்ளிட்டவை நடந்தது. பின்னர் சாமி- அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அமுதுஅளிக்கும் அமுது படையல் நிகழ்ச்சி நடந்தது.