அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தீமிதி விழா

தஞ்சை விளார் சாலை அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தீமிதி விழா நடந்தது.

Update: 2023-03-28 20:12 GMT

நாஞ்சிக்கோட்டை;

தஞ்சை விளார் சாலையில் அண்ணா நகர் பகுதியில் அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 58-ம் ஆண்டு பங்குனி உத்திர தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சாமி வீதி உலாவும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. அதேபோல தினசரி மதியம் கோவிலில் அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 5-ந் தேதி (புதன்கிழமை) அங்கப்பிரதட்சணம், காது குத்துதல், பெண்கள் மாவிளக்கு போடுதல், முடிஇறக்குதல், மற்றும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணி அளவில் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து பால் காவடி, பன்னீர் சாவடி, செடில் காவடி அலகு காவடி உள்ளிட்டவைகளை பக்தர்கள் எடுத்து வந்து கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்