நத்தம் அருகே முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நத்தம் அருகே முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-01-26 18:45 GMT

நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டி புதூரில் முத்தாலம்மன் மற்றும் காளியம்மன், வெற்றி விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் பூஜை, பூர்ணாகுதி, யாகசாலை பூஜைகள் கோவிலில் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்தமலை, காசி, ராமேசுவரம், வைகை உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனிததீர்த்தமும் வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கருத்தலக்கம்பட்டி புதூர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்