அய்யம்பாளையம் அருள்முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
அய்யம்பாளையம் அருள்முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் உள்ள மலையில் அருள்முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அருள்முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
அப்போது சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இதேபோல் பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் சன்னதி வளாகத்தில் உள்ள முருகன் கோவிலிலும் சூரசம்ஹாரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.