ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.

Update: 2022-09-24 20:33 GMT

கும்பகோணம்;

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று மாலை கவுரி பூஜையுடன் தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேவேந்திர பூஜை அம்பாள் திரு அவதாரம் நடைபெறுகிறது. நாளை(திங்கட்கிழமை) வெண்ணைத்தாழி அலங்காரம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் பணியாளர்கள் உபயதாரர்கள் செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்