நத்தம் அருகே செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

நத்தம் அருகே செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-09-18 21:00 GMT

நத்தம் அருகே செல்லம்புதூரில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள், தனபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில் நேற்று காசி, ராமேசுவரம், கரந்தமலை, அழகர்மலை உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் அடங்கிய தீர்த்த குடங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது.

பின்னர் யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க கோபுர உச்சிக்கு தீர்த்த குடங்கள் எடுத்து செல்லப்பட்டன. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. பின்னர் விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேகத்தில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செல்லம்புதூர் கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்