சத்திரப்பட்டி அருகே 1,008 பால்குட ஊர்வலம்
சத்திரப்பட்டி அருகே 1,008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
சத்திரப்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, நேற்று மஞ்சநாயக்கன்பட்டி வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் 1,008 பால் குடங்களை எடுத்து உச்சிமாகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.
முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள், கோவிலை வந்தடைந்தனர். அதன்பிறகு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், மஞ்சநாயக்கன்பட்டி, வீரக்காவலசு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.