சாரங்கபாணி கோவிலில் உதய கருட சேவை

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உதய கருட சேவை நடந்தது.

Update: 2023-07-28 20:49 GMT

கும்பகோணம்;

வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு இணையாக திகழ்வது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலாகும். இந்த கோவிலில் மூலவர் சாரங்கபாணி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோமளவல்லித் தாயார் தனி சன்னதி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஏகாதசி நாளில் உதய கருட சேவை நடைபெறுவது வழக்கம். நேற்று காலை உதய கருட சேவை சாரங்கபாணி கோவிலில் நடைபெற்றது. நேற்று அதிகாலை உற்சவர் சாரங்கபாணி சாமி மலர் அலங்காரத்தில் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கபாணி பெருமாளை தரிசனம் செய்தனர். வீதி உலாவுக்கு பின்பு சாரங்கபாணி சாமிக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்