ஆடி அமாவாசை வழிபாடு
நீடாமங்கலம் பகுதி கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாடு நடந்தது.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரி எமனேஸ்வரர் கோவிலில் ஆடிஅமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக எமனேஸ்வரி எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவில் குளத்தில் நீராடி தர்ப்பணங்களையும் பக்தர்கள் செய்தனர்.இதைப்போல திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.