சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு

கும்பகோணம் சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2023-07-03 21:02 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் கோர்ட்டு ரவுண்டானா அருகே மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகா், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளிட்ட சாமிகள் கருவறை சுவரைச் சுற்றி தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். இந்த கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. நேற்று காைல யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்த ஓரே சமயத்தில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்