சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழா: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்தன.

Update: 2023-08-12 19:00 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்தன.

மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டையில் உள்ள சடையாண்டி சுவாமி ஆடி பூஜை திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பிரான்மலை- சிங்கம்புணரி சாலையில் நடு மாடு, சின்னமாடு என 2 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் நடுமாடு பிரிவில் 8 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 13 ஜோடிகளும் கலந்து கொண்டன. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 21 மாட்டுவண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன.

நடுமாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறிப்பாய்ந்து சென்ற மாட்டுவண்டி சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

பரிசுகள்

சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவதாக கொன்னப்பட்டி ரமேஷ், 2-வதாக கள்ளந்திரி முருகன், 3-வதாக அழகாபுரி கிடாரிப்பட்டி சோலைச்சாமி கோகிலன், 4-வதாக மேலூர் வள்ளாளப்பட்டி அமல் ஆத்விக் பதினெட்டாம் படி கருப்பர் அணி வெற்றி பெற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக அவனியாபுரம் எஸ்.கே.ஆர் வண்டியும், 2-ம் பரிசு அவனியாபுரம் பசும்பொன் வண்டியும், 3-வதாக சத்திரப்பட்டி வண்டியும், 4-வது முத்துப்பட்டி வேப்பங்குளம் முனியாண்டி சாமி வண்டியும் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்