சிம்ஹாருடவாராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா
சிம்ஹாருடவாராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடந்தது.
கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சியம்மன் உடனாகிய கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி கோவில் கொண்டு சிம்ஹாருட வாராகி அம்மன் அருள் பாலிக்கிறார். இங்கு ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று சிம்ஹாருட வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அம்மன் குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அரங்காவலர் நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.