நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே ஏலகிரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா பக்தர்களுக்கு கங்கணம் கட்டி, அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மாவிளக்கு எடுத்து படைத்தல் நிகழ்ச்சி மற்றும் அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி, பம்ப வாத்தியங்கள் மற்றும் வான வேடிக்கை முழங்க வெகுவிமரிசையாக நடந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஏலகிரி, பழைய ஏலகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராடுதலுடன் கோவில் விழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.