கம்பைநல்லூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா 7 கிராம மக்கள் வழிபாடு

Update: 2023-06-10 19:30 GMT

மொரப்பூர்

கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர், கொன்றம்பட்டி, சூரனூர், டொக்கம்பட்டி, வையம்பட்டி வனத்தூர், வாளாப்பட்டி, கைகாலன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி முத்து மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல், கொல்லாபுரி மாரியம்மன், முத்து மாரியம்மன், கக்கு மாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு மாவிளக்கு எடுத்தல் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் ஆற்றில் இருந்து கரகத்துடன் ஊர்வலமாக காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் காளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், செல்லியம்மனுக்கு சேவை கட்டி கிராமங்களுக்கு செல்லுதல், சக்தி கரகம், சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 7 கிராம மக்கள் சார்பில் மாவிளக்கு எடுத்தல் மற்றும் எருது கட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து கரக மாலையை ஆற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழா, தீ மிதித்தல் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று 7 கிராமமக்களின் வீடுகளுக்கும் செல்லியம்மன், வேடியப்பன், மாரியம்மன் ஆகிய சாமிகளை தண்டி கையில் எடுத்து சென்று பூ பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 7 கிராமமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும் செய்திகள்