மாரியம்மன் கோவில் திருவிழா
காமலாபுரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஓமலூர்,மே.11-
ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 1-ந் தேதி கம்பம் நடுதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் சக்தி கரகம் எடுத்தலும், நேற்று பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், அக்னி கரகம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) வண்டி வேடிக்கை, மாலை 6 மணிக்கு மேல் நாடகமும் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டமும், மாலை 6 மணிக்கு மேல் நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.