புனித செபஸ்தியார் ஆலய திருவிழா

புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நடைபெற்றது

Update: 2023-02-12 18:45 GMT

காளையார்கோவில்

காளையார்கோவில் அருகே வலையம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மாலை நவநாள் திருப்பலி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை திருவிழா திருப்பலி நடைபெற்றது. பின்னர் புனித செபஸ்தியார், புனித அடைக்கல மாதா, புனித மிக்கேல் அதிதூதர் உருவம் தாங்கிய 3 சப்பரங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சப்பர பவனி நடைபெற்றது.

நேற்று காலை சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து சப்பர பவனியும் நடைபெற்றது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை காளையார்கோவில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் மற்றும் வலையம்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்