பிள்ளையார்நத்தத்தில் கோவில் திருவிழா; பக்தர்கள் பால்குட ஊர்வலம்

பிள்ளையார்நத்தம் மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

Update: 2022-08-09 16:26 GMT

திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தத்தில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கோவிலில் நேற்று திருவிழா தொடங்கியது.

இந்தநிலையில் இன்று பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்று கரைக்கு சென்று, அம்மனை வழிபாடு செய்தனர். பின்னர் அங்கிருந்து பால்குடங்களை சுமந்தபடி கோவில் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பித்தளைப்பட்டி பிரிவு, செம்பட்டி-வத்தலக்குண்டு சாலை வழியாக அவர்கள் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு பக்தர்கள் பால்குடங்களில் கொண்டு வந்த பாலை ஊற்றி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவில் நாளை (புதன்கிழமை) அக்னிசட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சிகளும், மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்