சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா

கல்லுக்குறிக்கி கிராமத்தில் நடந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.

Update: 2022-06-01 15:43 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறிக்கி கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் பொங்கல் வைத்தும், அம்மனுக்கு கூழ் ஊற்றியும் வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், தீமிதி விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பம்பை, மேள தாளங்கள் முழங்க பெண்கள் மா விளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர். மேலும் கரகத்தை தலை மீது வைத்து தலைகூடும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் இன்று (வியாழக்கிழமை) எருது விடும் விழாவும், நாளை (வெள்ளிக்கிழமை) அம்மனின் மாலைகள் கங்கையில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்