சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-04-26 18:32 GMT

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சாரங்கபாணி பெருமாள் கோவில்

கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. விழாவில் நான்காம் நாளான வருகிற 29-ந் தேதி ஓலைச் சப்பரத்தில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

தேரோட்டம்

9-ம் நாள் விழாவான மே 4-ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். அதனை தொடர்ந்து அன்று இரவு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மே 5-ந் தேதி கொடி இறக்கமும், 81 கலச ஸ்தாபன திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சிவசங்கரி, கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்