2 கோவில்களில் குடமுழுக்கு

2 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2023-04-05 19:00 GMT

தலைஞாயிறு அருகே ஓரடியம்புலத்தில் உள்ள சேவுகராயர், மதுரைவீரன், கலிதீர்த்த அய்யனார் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதேபோல் தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சிறைமீட்ட அய்யனார் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்