மேலமறைக்காடர் கோவிலில் வருடாபிஷேகம்
மேலமறைக்காடர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் கிராமத்தில் மேலமறைக்காடர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடந்து முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கோபூஜை, கும்ப பூஜையும், அதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகளும் நடந்தன. அதைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிள்ளையார், முருகன், காலபைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் செவ்வந்திநாத பண்டாரசன்னதி சுவாமிகள், கயிலைமணி வேதரத்னம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.