அன்னப்பசாமி கோவிலில் திருக்கல்யாணம்

அன்னப்பசாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2023-03-27 18:45 GMT

வேதாரண்யம் நகரில் உள்ள பழமைவாய்ந்த பூரணா, புஷ்கலா சமேத அன்னப்பசாமி கோவிலில் குடமுழுக்கு நடந்து 7-ம் ஆண்டை முன்னிட்டு வருடாபிஷேகம் நடந்தது. இதில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு யாக பூஜைகள் நடந்தன. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து சாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் பெண்களுக்கு மங்கல பொருட்களுடன் சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் சுகாதார பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்