தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா
தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 51.புதுக்குடியில் பிரசித்திப் பெற்ற தான்தோன்றீஸ்வரர் மற்றும் அஷ்டபுஜ காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நேற்று மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதில் கோவில் அர்ச்சகர்கள் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், சிவா சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் யாகசாலையில் கங்கை, யமுனை, காவேரி, கோதாவரி, பிரம்மபுத்திரா உள்ளிட்ட புண்ணிய நதிகளின் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து மாலை தான்தோன்றீஸ்வரர், சவுந்தரநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.