வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம்

வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது.

Update: 2022-11-10 19:15 GMT

வைணவ கோவில்களில் ஆண்டு முழுவதும் செய்யப்படும் பூஜைகள் அனைத்தையும் 10 நாட்களில் மொத்தமாக செய்யும் வகையில் பவித்ர உற்சவம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அதன்படி மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு உற்சவர் சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா வந்தார். முடிவில் யாகசாலையின் முன்பு கற்பூர ஆரத்தி, கும்ப தீப ஆரத்தி காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்