சாயாவனேஸ்வரர் கோவிலில் வில்லேந்திய வேலவருக்கு சிறப்பு வழிபாடு
சாயாவனேஸ்வரர் கோவிலில் வில்லேந்திய வேலவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பூம்புகார் சாயாவனேஸ்வரர் கோவிலில் வில்லேந்திய வேலவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் முருகன் பூம்புகார் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. இங்கு ஆடி கிருத்திகையையொட்டி வில்லேந்திய வேலவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சண்முகா அர்ச்சனை நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.