கோவில்களில் குடமுழுக்கு

கோவில்களில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2022-06-09 19:39 GMT

கும்பகோணம்:-

கும்பகோணம் கீழபருத்திகார தெருவில் சாந்தகுண மாரியம்மன், பால நடன காளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, மூலமந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, காலை 9 மணிக்கு கோவில் விமான கலசத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கும்பகோணம் மோதிலால் தெரு பகுதியில் சப்தமாதா பீடாஹாரிணி அம்மன், எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாக சாலை பூஜைகள நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்