சரஸ்வதி அலங்காரத்தில் ஆகாச மாரியம்மன் அருள்பாலித்தார்

சரஸ்வதி அலங்காரத்தில் ஆகாச மாரியம்மன் அருள்பாலித்தார்

Update: 2022-06-07 19:23 GMT

திருவிடைமருதூர்:-

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கு என்று தனி சன்னதி கிடையாது. அகல் விளக்கு மட்டும் ஒளிர்ந்து கொண்டிருக்கும். இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை இரவு சமயபுரம் மாரியம்மன் ஆகாச மார்க்கமாக திருநறையூரில் இருந்து அலங்கார மின் விளக்குகள் ஜொலிக்க பல்லக்கில் வருவது வழக்கம். அம்மன் இங்கு தங்கியிருக்கும் 10 நாட்களும் திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்படும். விழாவில் அம்மன் தினம் ஒரு அலங்காரத்தில் அருள்பாலிப்பது சிறப்பு. இந்த ஆண்டு விழா தொடங்கி 4-வது நாளான நேற்று ஆகாச மாரியம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதனகோபால அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், சேஷசயன அலங்காரம், ராஜராஜேஸ்வரி அலங்காரம் என பல்வேறு அலங்காரங்களில் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெரிய திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் துரை. சினிவாசன், அறங்காவலர்கள் டாக்டர் கோபாலகிருஷ்ணன், ராஜீ மற்றும் புராதனக் கவரையர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்