செல்வ விநாயகர் கோவில் இடித்து அகற்றம்

செல்வ விநாயகர் கோவில் இடித்து அகற்றம்

Update: 2023-07-31 11:30 GMT

பல்லடம்

பல்லடம் காந்தி ரோட்டில் செல்வ விநாயகர், பாலதண்டபாணி கோவில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காந்தி ரோடு விரிவாக்க பணிக்காக கோவிலின் முன்புறம் இருந்த நவகிரகங்கள் மற்றும் சிலைகள் அகற்றப்பட்டது. இந்த கோவிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தற்போது கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பாலாலய பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டு அருகே உள்ள பொன்காளியம்மன் கோவிலில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி சுவாமி சிலைகள் கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அங்கு சுவாமியை வழிபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், திருப்பணி குழுவினர் பார்வையிட்டனர். செல்வ விநாயகர், தண்டபாணி கோவிலில் திருப்பணிகள் நடைபெறுவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்