கோவில் காளை சாவு; கிராம மக்கள் அஞ்சலி
கண்ணமங்கலப்பட்டி கோவில் காளை இறந்தது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே உள்ளது கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி. இந்த கண்ணமங்கலப்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான கோட்டைச்சாமி என்ற கோவில் காளை பல பந்தயங்களிலும் பங்கேற்று வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த காளை உடல்நல குறைவுடன் காணப்பட்டது. நேற்று காலை திடீரென கோவில் காளை இறந்தது. அதனை தொடர்ந்து கிராமமே ஒன்றிணைந்து கோவில் காளைக்கு அஞ்சலி செலுத்தி இறுதி மரியாதை செய்து ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.