தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட அரசஜீர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழா நடந்தது. பெண்கள் மாவிளக்கு மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து மாரியம்மன் மற்றும் முத்தப்பா சாமிகள் கிராமங்களில் ஊர்வலமாக சென்றனர். அப்போது வீடுகள் தோறும் பூஜைகள் செய்து ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கிராம மக்கள் தங்களது உறவினர்களுக்கு அசைவ விருந்து வழங்கினர்.