மாதேமங்கலம் காலனியில்ஓங்காளியம்மன் கோவில் திருவிழாபெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

Update: 2023-05-24 19:00 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாதேமங்கலம் காலனியில் ஓங்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஊர் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நேற்று சக்தி கரகம் அழைத்தல், அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவில் இன்று (வியாழக்கிழமை) மாவிளக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்