தர்மபுரி குமாரசாமிப்பேட்டைமுனியப்பன் கோவில் திருவிழாதிரளான பக்தர்கள் தரிசனம்

Update: 2023-05-14 19:00 GMT

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மேல் தோப்பு தெருவில் உள்ள ராமாயி, பொம்மாயி சமேத விரிஞ்சிபுரத்து முனியப்ப சாமி கோவிலில் வைகாசி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்