அரூர்:
அரூரில் கோர்ட்டு பின்புறம் உள்ள கருமாரியம்மன் கோவிலில் 33-ம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது. கங்கணம் கட்டுதலுடன் தொடங்கிய விழாவில் ஈஸ்வரன், பார்வதி, கருமாரியம்மன் வேடமணிந்து பக்தர்கள் வந்தனர். இதையடுத்து பஸ் நிலையம் அருகில் உள்ள வாணீஸ்வரர் கோவிலில் இருந்து சக்தி அழைத்தல், மகா அபிஷேக ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து வேப்பிலை ஆடை, செவ்வாடை அணிந்து பக்தர்கள் அக்னி சட்டி, பூங்கரகம் எடுத்து வந்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா லட்சுமி கிருஷ்ணன், வெங்கடேசன், ரேகா அர்ச்சகர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.