கிருஷ்ணகிரி சோமேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

Update: 2023-04-23 19:00 GMT

குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, புன்னியாவாசனம், கலசபூஜை, யாக பூஜைகள், மகா சங்கல்பம் நடந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மங்களாரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்