மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள கொமாரபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி கம்பம் நட்டு, காப்புக்கட்டி தொடங்கியது. தொடர்ந்து தினமும் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி, கோவிலுக்கு சென்று கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். மேலும் தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 10-ந் தேதி முதல் சாமி திருவீதி உலாவும் நடந்தது. நேற்று வடிசோறு பூஜை செய்யப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைமுன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். நாளை (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.