பாலக்கோடு:
பாலக்கோடு அருகே மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம் நடைப்பெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை பக்தர்கள் தங்கள் தலையில் வைத்து எடுத்து சென்று கோவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மணியகாரன் கொட்டாய், நாகப்பட்டியான் கொட்டாய், தண்டகாலன் கொட்டாய் ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் கவுண்டர் மாது, மந்திரிகவுண்டர் பழனி, இருசன், கணேசன், பெருமாள், மணி, சிவன், சின்னசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.