நல்லூர் ஈஸ்வரன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

நல்லூர் ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. நேற்று முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது.

Update: 2023-01-30 17:43 GMT

நல்லூர் ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. நேற்று முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது.

விஸ்வரசாமி கோவில்

திருப்பூர் காங்கேயம் ரோடுநல்லூரில் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சாமி, சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 22 ஆண்டுகள் கடந்தும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்ததால் பக்தர்கள் இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இதையொட்டி கோவில்புரனமைப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. முதல் கால பூஜை நேற்று மாலை தொடங்கி இரவு 8:30 மணி வரை நடைபெற்றது.முளைப்பாரி,தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மிருத்சங் கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் முதற்கால யாக பூஜை திரவ்யாஹீதி, பூர்ணாஹூதி, தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.

நாளை கும்பாபிஷேகம்

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8:30 மணி முதல் 11. 30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 2-ம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட உள்ளது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை விக்ரங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 3-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, த்ரவ்யாஹீதி, பூர்ணாஹூதி, தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

நாளை(புதன்கிழமை)காலை 5:30 மணிக்கு விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வேஸ்வர சாமி கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்