அதியமான்கோட்டை வீரகாரன் கோவில் திருவிழா

Update: 2023-01-01 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள வீரகாரன் கோவிலில் 24-வது ஆண்டு திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை கோவில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அதியமான்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்