ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையத்தில் அங்காளம்மன் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் தேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து புதிய தேர் செய்வதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்பேரில் உபயதாரர்களின் மூலம் 15 டன் எடையில் 11½ உயரம், 11 அடி அகலம் கொண்ட பெரிய தேரும், 1½ டன் எடையில் சிறிய தேரும் செய்யப்பட்டன. தேரின் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகளில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பெண்களின் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.