பையர்நத்தம் அமிர்தேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Update: 2022-12-06 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் மயிலை மலை மலை மீது உள்ள அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் மாலை 5.45 மணிக்கு மயிலை மலை மீது உள்ள பாலமுருகன் கோவிலுக்கு மேல் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க மயிலை மலையை சுற்றி கிரிவலம் சென்று, அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகையை தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்