அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா

திருப்பூர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2022-11-19 18:15 GMT

திருப்பூர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆராட்டு விழா

ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஅய்யப்பன் பக்த ஜன சங்கம் சார்பில் திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு விழா நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் காலை 8 மணிக்கு சுவாமி அய்யப்பன் திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்ம ஸ்ரீமகேஷ் மோகனரு தலைமையில் பெருமாள் கோவில் குளத்தில் மேளதாளங்கள் முழங்க அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாலை அணிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஊர்வலம்

பின்னர் மாலை ஈஸ்வரன் கோவிலில் இருந்து அய்யப்ப சுவாமி, ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து அய்யப்பன் கோவிலை சென்றடைந்தது. பின்னர் இரவு 9.30 மணிக்கு கொடி இறக்குதலுடன் உற்சவம் நிறைவடைந்தது. மண்டல பூஜையையொட்டி நன்கொடையாளர்கள் சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் நேற்று இரவு வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஅய்யப்பன் பக்த ஜன சங்க நிர்வாகிகள், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்