சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
மோகனூர்:
மோகனூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், தேன், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடந்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.