சங்கராபுரம் பகுதிகோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சங்கராபுரம் பகுதி கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-03-14 18:45 GMT


சங்கராபுரம்.

சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள மங்கலநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர் வேதகோஷங்கள் முழங்க பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போன்று சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் கோவில், மஞ்சபுத்தூர் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்