சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
நன்செய் புகளூரில் மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு வைகாசி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் புன்னம், திருக்காடுதுறை, குந்தாணிபாளையம், நத்தமேடு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.