பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை

பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை

Update: 2022-12-16 19:15 GMT

தா.பேட்டை காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. அப்போது சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு பஞ்சமுக பைரவருக்கு அபிஷேகங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவர் பக்தர்களுக்கு அருளினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

இதேபோல் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தா.பேட்டை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் மார்கழி மாதத்தை வரவேற்கும் விதமாக வீடுகளின் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டனர். தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரியமாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ராஜகாளியம்மன், சண்முககிரி மலை பாலதண்டாயுதபாணி சுவாமி, என்.கருப்பம்பட்டி கிராமத்தில் வள்ளி, தேவசேனா ஸ்ரீமுருகப்பெருமான் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்